திண்டுக்கல் மாவட்டம் நத்தம்,குட்டுப்பட்டி அருகே லட்சுமணபுரம் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி. இவருக்கு இன்று காலை பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து வீட்டில் இருந்தவர்கள் 108 ஆம்புலன் மூலம் ஆஸ்பத்திரி கொண்டு செல்லும் வழியில் திடீரென பிரசவ வலி அதிகமானதால் ஓட்டுநர் சின்னஅடைக்கண் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்தினார். பின்னர் ஆம்புலன்ஸ் அவசர கால ஊழியர் சேகர் ஆம்புலன்ஸில் பிரசவம் பார்த்தார். அதில் புவனேஸ்வரிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து தாயும் சேயும் கோசுகுறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர்.
இதனால் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.
