பாரூர் ஐயப்பா சேவா சங்கம் சார்பில் படி பூஜை மற்றும் ஐயப்பன் சிலை ஊர்வலம் நடைபெற்றது

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே பாரூர் கிராமத்தில் இன்று கார்த்திகை முதல் தேதியில் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலை செல்வது வழக்கம் அந்த வகையில் இன்று கார்த்திகை ஒன்றாம் தேதி என்பதால் பாரூர் ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் இன்று பாரூர் ஐயப்பன் கோவிலில் படி பூஜை விழா வெகு விமர்சியாக ராஜமணி ஆசிரியர் திருமலைநாதன் விஜயா குடும்பத்தினர் தலைமையில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து டிராக்டரில் ஐயப்பனின் சிலை வைத்து பாரூர் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர் இதில் கிராம மக்கள் வீடுகள் தோறும் தேங்காய் பழங்கள் தட்டு வரிசை கொடுத்து ஐயப்பனின் சிலையை வணங்கி வந்தனர் இந்த விழாவிற்கு. கணேச கவுண்டர், நாகராஜ் கவுண்டர், சின்னசாமி, குருசாமி அருள், மனோகரன், வெங்கடேசன், கார்த்தி, சிவகுட்டி, செந்தில்குமார், வினோத்,தினேஷ் குமார், ராஜவேல் உள்ளிட்ட பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்