போச்சம்பள்ளி அருகே சாமாண்டபட்டி அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மழை நீர் மற்றும் கொசுவால் குழந்தைகள் காய்ச்சல்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாப்பாரப்பட்டி ஊராட்சி சாமாண்டபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை சுமார் 85 குழந்தைகள் பயின்று வருகின்றனர் கடந்த 10 நாட்களாக பெய்து வந்த கனமழைகளால் நிலையில் மழைநீர் தண்ணி பள்ளிக்குள் செல்வதால் அங்கு படிக்கும் குழந்தைகளுக்கு கொசுக்கள் மற்றும் சேரும் சகதி மாத உள்ளதால் காய்ச்சல் ஜுரம் போன்றவை ஏற்படுகிறது அதேபோல் பள்ளிக்கு குழந்தைகளை பெற்றோர்கள் அனுப்புவதற்கு அச்சப்படுகின்றனர் இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் அவர்களிடம் கூறியும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என பெற்றோர்கள் வேதனை உடன் கூறுகின்றனர் மேலும் மாவட்ட கல்வி அதிகாரிகள் பள்ளிக்குள் தண்ணீர் செல்லாமல் சுகாதாரமாக பாதுகாத்தால் குழந்தைகளை அனுப்புவதற்கு வசதியாக இருக்கும் என பெற்றோர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

சகாதேவன் போச்சம்பள்ளி கிருஷ்ணகிரி மாவட்டம்