ராமநாதபுரம் ரோட்டரி கிளப் ஆப் கோரல் சிட்டி,ஜருஃபா ஆயுஷ் கிளினிக் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாமில் பிறந்த குழந்தைகள் முதல் 16 வயது வரையிலான சிறுவர்களுக்கு,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவும், ஞாபக சக்தியை அதிகப்படுத்தி படிப்பில் சிறந்து விளங்க உதவும் “ஸ்வர்ணபிரஷான்” ஆயுர்வேத மூலிகை சொட்டு மருந்து பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்பட்டது. இம்முகாமில் 100-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பயனடைந்தனர்.மேலும் தினமும் இலவச அக்குபஞ்சர் மற்றும் மருந்துகளுடன் நடைபெற்ற முழங்கால் மூட்டுவலி முகாமில் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு ஆயுர்வேத மருத்துவர்கள் ஜருபா ரக் ஷானா, ஜருபா ஷப்ரின்,அப்துல் ஜலீல் ஆகியோர் சிகிச்சை அளித்தனர். மேலும் முகாம் பற்றி டாக்டர் அப்துல் ஜலீல் கூறுகையில் மூட்டுவலிக்கான முகாம் 18-ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும்.மேலும் பூஷ்ய நட்சத்திரத்தன்று ஒவ்வொரு மாதமும் நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.
ராமநாதபுரத்தில் சிறுவர்களுக்கான இலவச மருத்துவ முகாம்!!!
