கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு முருகன் என்கிற முருகேசன் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக சூலூர் பகுதியை, சேர்ந்த முத்து செல்வம் என்பவரது மகன் அரவிந்த் என்கிற அரவிந்த் குமார் மீது, சூலூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்தனர். இவ்வழக்கின் விசாரணை கோவை முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிவு பெற்று குற்றவாளி அரவிந்த் என்கிற அரவிந்த் குமார் என்பவருக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 5,000/- அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற தலைமை காவலர் பிரபுவை, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் வெகுவாக பாராட்டினார்
கொலை குற்றவாளிக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 5,000/- அபராதம் விதித்து தீர்ப்பு
