பென்னாகரம் அருகே ஏரி நிரம்பி சாலையில் தண்ணீர் செல்வதால் வெளியே வர முடியாமல் தவிக்கும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள்..


தர்மபுரி மாவட்டம்
பென்னாகரம் அருகே உள்ள நாகனூர் கிராமத்தில் ஏரி நிரம்பி சாலையில் செல்லும் தண்ணீரால் பள்ளிக்குச் செல்ல முடியாமல் சுமார் 30க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் தவித்து வருகின்றனர்

தமிழகம் முழுவதும் ஆங்காங்கே வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மேலும் பென்னாகரம் சுற்று வட்டார பகுதியில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக ஏரிகள் நிரம்பி உள்ளது. இந்த நிலையில் பென்னாகரம் அருகே உள்ள கருங்கல் மேடு கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கருங்கல் மேடு கிராமத்தில் இருந்து சுமார் 40-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பென்னாகரம் பகுதிக்கு பள்ளிக்குச் சென்று வருகின்றனர். மேலும் கிராமத்தில் இருந்து கூலி வேலைக்கு தினந்தோறும் ஏராளமான மக்கள் சென்று வருகின்றனர். கருங்கல் மேடு பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு சாலை வசதி இல்லாமல் குண்டும் குழியுமான சாலையில் இப்பகுதியில் வசித்து வரும் மக்கள் 20 வருடங்களாக சென்று வருவதாக கூறுகின்றனர். இந்த நிலையில் பென்னாகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பென்னாகரம் அருகே உள்ள கருங்கல் மேடு நாகனூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு இடையே உள்ள நாகூர் ஏரி நிரம்பி கருங்கல் மேடு கிராமத்திற்கு செல்லக்கூடிய சாலையில் தண்ணீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடுகிறது இதனால் கருங்கல் மேடு கிராமத்தில் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த கிராமத்திலிருந்து பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் வேலைக்கு செல்ல கூடியவர்கள் கிராமத்தை விட்டு வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு இதே போல் கருங்கல் மேடு நாகனூர் ஆகிய கிராமங்களுக்கு நடுவே உள்ள ஏரி நிரம்பியதால் இதே சூழல் ஏற்பட்டதாகவும் இதுகுறித்து கடந்த முறை இருந்த பஞ்சாயத்து தலைவர் மற்றும் அரசு அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்ததாகவும் அதற்கு அரசு அதிகாரிகள் பாலம் அமைத்து சாலை அமைத்து தருவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு தற்போது இரண்டு வருடம் ஆகியும் எங்கள் கிராமத்தை கண்டு கொள்ளாமல் உள்ளனர். என்றும் இதனால் மழைக்காலங்களில் ஏறி நிரம்பி சாலையில் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடுவதால் எங்கள் அடிப்படை வேலைகள் அனைத்தும் பாதிக்கப்படுவதோடு எங்கள் கிராமத்தில் இருந்து பள்ளிக்கு செல்லக்கூடிய பிள்ளைகள் வேலைக்குச் செல்லக் கூடியவர்கள் மற்றும் பால் எடுத்துச் சென்று கரடு முரடான பாதையில் நடந்து சென்று தான் ஆளை ஊற்ற வேண்டிய நிலையில் உள்ளது தற்போது ஏரி நிரம்பி சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் அனைவரும் கிராமத்தை விட்டு வெளியே செல்ல முடியாமல் கிராமத்திலேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கிராமத்தை விட்டு வெளியேற இரண்டு வழித்தடங்கள் இருந்தாலும் கூட இரண்டு வழித்தடத்தில் தண்ணீர் அதிக அளவில் செல்வதால் ஒரு வழித்தடத்தில் மரக்கட்டை அமைத்து நடந்து செல்லும் நிலை உள்ளது. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் எங்கள் பிள்ளைகளின் படிப்பும் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து எங்கள் கிராமத்திற்கு செல்லக்கூடிய கரடு முரடான சாலையை சீரமைத்து புது சாலை மற்றும் உயர்மட்ட பாலம் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.