ஏரியூர் அருகே மீண்டும் திறக்கப்பட்ட அரசு பள்ளி. பென்னாகரம்

ஏரியூர் அருகே மீண்டும் திறக்கப்பட்ட அரசு பள்ளி. பென்னாகரம், அக்.16 – ஏரியூர் அருகே உள்ள கிழக்கு ஏமனூரில் மாணவர்கள் சேர்க்கை இல்லாததால் மூடப்பட்ட அரசு துவக்கப்பள்ளி நேற்று,மீண்டும் திறக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டம், ஏரியூர் அடுத்த கிழக்கு ஏமனூரில் 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு இருந்த அரசு துவக்கப் பள்ளியில் மாணவர்கள் இல்லாததால், கடந்த கல்வியாண்டு பள்ளி மூடப்பட்டது. இந்நிலையில் அப்பகுதி மக்களின் தொடர் கோரிக்கை அடுத்து ஊர் மக்கள், முன்னாள் மாணவர்கள், அருகாமையில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் இணைந்து அங்கு பள்ளி செல்லும் மாணவர்களின் பெற்றோர்களிடம் பேசி பள்ளியில் சேர்க்குமாறு அறிவுறுத்தினர். இந்நிலையில், நேற்று மறைந்த மேதகு அப்துல் கலாம் பிறந்த நாளை ஒட்டி நேற்று மீண்டும் அந்தப் பள்ளி திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, தர்மபுரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தென்றல் தலைமை வகித்தார் இதையெடுத்து அங்கு பள்ளி மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. இதில் ஏழு மாணவர்கள் பள்ளியில் சேர்ந்தனர். அருகே உள்ள பள்ளியில் இருந்து ஒரு ஆசிரியர் பணி நியமனம் செய்யப்பட்டார் இந்நிகழ்ச்சியில் ஏரியூர் ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் முருகன் மேற்கு எமனூர் பள்ளி தலைமை ஆசிரியர் தனபால் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.