
கோவை சிவாஜி காலனி பகுதியில், தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் கோவை மண்டல அலுவலகம் அமைந்துள்ளது. இக்கட்சியின் மாநில துணை தலைவராக வழக்கறிஞர் புஸ்பாணந்தம் இருந்து வருகின்றார். இவரது தலைமையில் இன்று கலப்பு திருமணம் நடைபெற்றது. கோவை மாவட்டம் உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜமால் முகைதீன்-40.
வயதான இவர், முதலிபாளையம் பகுதியை சேர்ந்த சசிகலா என்ற 26வயது பெண்ணை, கடந்த எட்டு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இருவரும் வேறு வேறு சமூகம் என்பதால் இருவரது வீட்டிலும், இவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இன்று, தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பாக இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. மணமகன் வீட்டு உறுப்பினர்கள் பலர் முன்னிலையில், இந்து முறைப்படி, தாலி கட்டி, தனது மனைவியாக ஏற்று கொண்டார். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கபட்டது. இந்த நிகழ்வில்,
வழக்கறிஞர் குமாஸ்தாக்கள் செல்வராஜ், லட்சுமி, திவ்யா, கவுண்டம்பாளையம் லட்சுமி, வைத்தியர் பாலகிருஷ்ணன், முருகன், சிறுபான்மை பிரிவு தலைவர் அருள் தாஸ், பால் ராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
