
ஏரியூர் அடுத்த மலையனூர் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஏரியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட இராமகொண்டாள்ளி மற்றும் தொன்னகுட்டஅள்ளி ஆகிய இரண்டு பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமங்களுக்கு மலையனூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.

முகாமில் மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாறுதல், புதிய குடும்ப உறுப்பினர் அட்டை, ஆதார் திருத்தம், இலவச வீட்டுமனை பட்டா, இலவச வீடு, உள்ளிட்ட கோரிக்கைகள் வேண்டி பொதுமக்கள் மனு அளித்தனர்.
மனுக்களை ஏற்ற அதிகாரிகள் உடனடியாக மனுகள் பரிசீலனை செய்து மகாத்மா காந்தி ஊரக வேலை திட்ட மனுக்கள் தீர்வு காணப்பட்டு மனுதாரர்களுக்கு உடனடியாக அட்டைகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பென்னாகரம் எம்.எல்.ஏ ஜி.கே மணி, ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கல்பனா திமுக முன்னாள் மாவட்ட பொறுப்பாளர், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் தர்ம செல்வன், ஏரியூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணன், மாவட்டத் துணைச் செயலாளர் உமா சங்கர் பொதுக்குழு உறுப்பினர் சோலை மணி முன்னாள் சேர்மேன் தென்னரசு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தங்கராஜ் தொமுச தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
