
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியத்துக்குட்பட்ட எலவம்பட்டி ஊராட்சியில் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் சிவசவுந்திரவல்லி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக நல்லதம்பி எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
ஊராட்சி மன்ற தலைவர் மேனகா விவேகானந்தர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தார். கூட்டத்தில் பொதுமக்கள் தங்களுடைய குறைகளை எடுத்துரைத்தனர்.

அப்போது 3 அடிப்படை கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும் எனவும்,
இளம்வயது திருமணத்தை தடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் நல்லதம்பி எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
தொடர்ந்து, அனைத்து மாணவ -மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்றும், படிப்பதற்கான வசதிகளை நமது மாவட்ட ஆட்சியில் செய்து தருகிறோம் எனவும் கலெக்டர் தெரிவித்தார்.
