
திருப்பத்தூர் மாவட்டம் இரவு பெய்த கன மழையின் காரணமாக ஆண்டியப்பனூர் அணை நிரம்பி வழிவதால் ஓடையில் இருந்து வெளியேறி வரும் உபரி நீரால் மாடப்பள்ளி ஏரி புதுக்கோட்டை ஏரி மற்றும் திருப்பத்தூர் பெரிய ஏரி ஆகிய மூன்று ஏரிகளும் நிரம்பி வழிகிறது
மேலும் மூன்று பெரிய ஏரிகளும் நிரம்பியதன் காரணமாக விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைகின்றனர்
பின்பு அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் திருப்பதி ஏரிகளுக்கு பூஜை செய்து மலர் தூவி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி அடைந்தார்கள்
பின்பு ஏரிகளில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மீன்களைப் பிடித்து தண்ணீரில் விளையாடி மகிழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
