
நீர் பாதுகாப்பு துறையில் செயல்பட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான சிறுதுளி, அமைப்பு சார்பாக கோவை உக்கடம் பகுதியில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்து பேசிய சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் கூறியதாவது.. சிறுதுளி, அமைப்பு தனது 22 ஆண்டுகால பயணத்தில், கோவையில் 10 லட்சம் மரங்களை நட்டு உள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டில் மாநகராட்சியின் திட்டங்களை செயல்படுத்தும் வகையில், கோவையில் பல்வேறு பகுதிகளில் ஒரு லட்சம் மரங்களை, நட இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் சிறுதுளி அமைப்பு, இந்து சமய அறநிலைத்துறையுடன் இணைந்து கோவில் நிலங்களை, சுற்று சூழல் மறு சீரமைப்புக்கு பயன்படுத்தும் எனவும், சிறுதுளி அமைப்பின் சார்பாக இனி சென்னையிலும், தனது பணிகளை தொடங்க உள்ளதாகவும், இதற்காக முதற்கட்டமாக சோளிங்கநல்லூரில் அமைந்துள்ள ஓடைக்கேணி வண்ணாங்குளத்தை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அதன் கொள்ளளவை, 19 மில்லியன் லிட்டராக உயர்த்துவதே இதன் நோக்கமாக உள்ளது என்றும் தெரிவித்தார். இத்தகைய செயலை எங்களுக்கு அளித்த தமிழக அரசுக்கு நாங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும், எங்களது பணிகளை ஆழமாக புரிந்து கொண்ட தமிழக அரசு, நீர் நிலைகளில் பணியாற்றுவதற்கும் , அவற்றை மீட்டெடுப்பதற்கும் எங்களுக்கு அதிகாரப்பூர்வ அனுமதியை வழங்கியுள்ளதாக தெரிவித்தார். மேலும் சிறு துளி அமைப்பின், தொடர்ச்சியான முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில், தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், கடந்த அன்று சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில், மாநில அளவிலான விருதை வழங்கி பெருமைப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் மேலும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வைல்ட் தமிழ்நாடு எனும் ஆவணப்படத்தை, வரும் பிஎஸ்ஜி கல்லூரியில் திரையிட உள்ளதாக வும் தெரிவித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் பொழுது சிறுதுளி அமைப்பின் அறங்காவலர் சதிஷ், குழு உறுப்பினர் சந்திரசேகர், சுஜனி பாலு, சிறுதுளி தலைமை செயல்பாட்டு அதிகாரி சின்னச்சாமி உடனிருந்தனர்.
