
திருப்பத்தூர் மாவட்டம் காக்கங்கரை அடுத்த நத்தம் பகுதியில் அனுமதியின்றி மண் கடத்துவதாக திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி சியாமளா தேவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு கந்திலி போலீசார் சென்றனர்.
அப்போது அனுமதியின்றி மண் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.
போலீசார் விசாரணையில் திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி சேர்மன் ஆக இருக்கும் திரு திருமுருகன் என்பவருக்கு சொந்தமான டிப்பர் மட்டும் ஜே சி பி இயந்திரம் என போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இருப்பினும் அவர்கள் ஆளுங்கட்சி சேர்மன் என்பதால் அமோகமாக மண் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மண் கொள்ளை அடிப்பது மிகவும் தவறு முறையாக அனுமதி பெறவில்லை என்றால் யாராக இருந்தாலும் வழக்கு பதிவு செய்யப்படும் என டிப்பர் லாரி ஓட்டுநர் விஜய் ஜேசிபி இயந்திர ஆபரேட்டர் முரளி ஆகியோர் மீது இன்று கந்திலி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர்
மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய டிப்பர் லாரி ஜேசிபி இயந்திரத்தின் பறிமுதல் செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின்
நேர்மையை பார்த்து மாவட்ட பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை பாராட்டி வருகின்றனர்.
