
கோவை வெள்ளக்கிணர் அரசு ஆரம்பப்பள்ளியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 73 வது பிறந்தநாளை ஒட்டி திமுக 2 வது வட்டம் துடியலூர் கிழக்கு பகுதி சார்பில் கேக் வெட்டி பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கியும் சிறப்பாக கொண்டாடினர். இதில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு பள்ளி குழந்தைகள் பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாடி வாழ்த்து தெரிவித்தனர்.
திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலினின் 73 வது பிறந்தநாளை திமுகவினர் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வெகு விமர்சையாக கொண்டாடிவருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திமுக 2 வது வட்டம் துடியலூர் கிழக்கு பகுதி சார்பில் கோவை வெள்ளக்கிணர் அரசு ஆரம்பப்பள்ளியில் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
கிழக்கு பகுதி கழக செயலாளர் அருள்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாநகராட்சி 2 வது வார்டு மாமன்ற உறுப்பினர் புஷ்பமணி அருள்குமார், 2 வது வட்டம் ஆ செயலாளர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சுமார் 10 கிலோ எடையுள்ள மு க ஸ்டாலின் உருவம் பொறித்த கேக்க்கினை பள்ளிக் குழந்தைகளுடன் இணைந்து வெட்டி அதனை குழந்தைகளுக்கு ஊட்டினர். மேலும் பள்ளியில் பயிலும் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கும் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் தெய்வசிகாமணி, பகுதி பொருப்பு குழு ஜாபர் அலி, பொருப்பு குழு உறுப்பினர்கள் நாகராஜ், ஆறுமுக, சவுந்தர், பாஸ்கர், பி எல் ஏ 2 பார்வதி, செல்வி, ரவி, பி டி ஏ கோவிந்தராஜ், நாகராஜ், பெரியநாயகி, விஜயா, வீரமணி, முருகேசன், சார்லஸ், உதயகுமார், பி எல் சி கோமதி, தினகரன், ஆசிரியர்கள் சுமித்ரா, சுகிர்தலா, பரிமளா கலாஜோதி மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகள், வட்டக் கழக நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள், பி எல் ஏ 2, பி எல் சி நிர்வாகிகள், பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
