திருப்பத்தூர் அருகே நிதி உதவி பெறும் பள்ளி மாணவர் விடுதியில் தங்கி படித்து வந்த 11ஆம் வகுப்பு மாணவன் பூட்டப்பட்ட கிணற்றில் மர்ம மரணம்!போராட்டத்தில் ஈடுபட முயன்ற உறவினர்கள் கைது

oplus_1024

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி இவரது மகன் முகிலன் இவர் திருப்பத்தூர் பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தோமினிக் சாவியோ மேல்நிலைப் பள்ளியில் மாணவர் விடுதியில் தங்கி பதினோறாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் மாணவன் கடந்த ஒன்றாம் காணாமல் போனதாக பள்ளி நிர்வாகம் பெற்றோர்களிடம் கூறிய நிலையில் அதிர்ந்து போன பெற்றோர்கள் எனது மகனை காணவில்லை என திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்

oplus_1024

புகாரின் பேரில் இரண்டு நாட்களாக தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில்

அதே பள்ளியில் உள்ள மூடப்பட்டிருந்த கிணற்றில் மாணவன் சடலமாக மீட்கப்பட்டார்.
இதனை அறிந்த பெற்றோர்கள் கத்தி கதறி அழுதனர். மேலும் சாலை மறியல், காவல் நிலையம் முற்றுகை, திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முற்றுகை என பல்வேறு போராட்டங்கள் நடத்திய நிலையில்

போலீசார் உறவினர்களிடம் தவறு ஏதேனும் நடந்திருப்பேன் பள்ளி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன் அடிப்படையில் முகிலனின் உடல் கடந்த ஐந்தாம் தேதி அடக்கம் செய்யப்பட்டது.

ஆனால் அதிலிருந்து இதுவரை பள்ளி நிர்வாகத்தினர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் இந்து மக்கள் கட்சியினர் மற்றும் உறவினர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரை சந்திக்க வரும்போது போலீசார் மாவட்ட ஆட்சியர் அலுவலக நிர்வாகிகளும் முன்பு தடுத்து நிறுத்தினர்.

இதன் காரணமாக போலீசாருக்கும் உறவினர்களுக்கும் இடையே படு வாக்குவாதம் ஏற்பட்டது.

அதன் பின்னர் அங்கிருந்து பள்ளியை நோக்கி சென்ற உறவினர்களை போலீசார் தடுத்து நிறுத்திய போது திரும்பவும் வாக்குவாதம் ஏற்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

இதன் காரணமாக பரபரப்பு காணப்பட்டது