
திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இருந்து கடந்த 30-7-25- அன்று பத்திரிக்கை செய்தி வந்தது. 199 இருசக்கர வாகனங்கள், 3 மூன்று சக்கர வாகனங்கள், 21 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 223 வாகனங்கள் திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை சார்பாக ஏலம் விடப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்கள். ரூ.100 செலுத்தி அனுமதி சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என சொல்லப்பட்டது.
இங்கே ஏலம் எடுக்க திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர்,ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி,சேலம் மற்றும் கர்நாடகா, ஆந்திரா பகுதியிலிருந்து ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர். ஒரு வண்டி ஏலம் எடுக்க 5 பேர் என்ற கணக்கில் 1500 பேருக்கு அனுமதி ரசீது வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. 1500 பேருக்கு அனுமதி ரசீது வழங்கினால் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் பெறப்பட்டது. கடந்த ஆண்டு இதுபோல பணம் பெறப்பட்டது. ஆனால் அந்த பணத்தில் ஏலம் எடுக்க வருபவர்களுக்கு குடிக்கிற தண்ணீர் வசதி செய்து தரவில்லை, அவர்கள் அமர இருக்கை, எந்தவித அடிப்படை வசதிகள் செய்யவில்லை. பொது ஏலம் என்று சொல்லி வண்டி உரிமையாளரிடம் ஏலம் விடாமல் கொடுப்பது, மேலும் ஏலத்தில் அனுமதி சீட்டு பெற்றவர்கள் மற்றும் பெறாதவர்கள் என அனைவரையும் உள்ளே விட்டு ஏலம் கேட்பது போல் கேட்க சொல்லி கடைசியாக 60 வண்டிக்கு மேல் ஏலம் எடுத்தும் விட்டு சென்று விட்டனர். இதில் காவல் துறையின் உயர் அதிகாரியின் மகனும் உண்டு. இவ்வாறு விட்டு சென்ற 60 வண்டிகளையும் இரவு 7 மணிக்கு மேல் காவலர்களே ஒவ்வொரு வண்டியின் ஆரம்ப விலையை கட்டி விட்டு 6 வண்டிக்கு மேல் அவர்களே எடுத்து சென்று விட்டனர். இவ்வாறு பல்வேறு சம்பவங்கள் கடந்த முறை ஏலமிட்டபோது நடைபெற்றது. எனவே இந்த முறை ஏலம் எடுப்பதற்கு குடிநீர் வசதி, இருக்கை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும், நேர்மையான முறையில் இந்த
ஏலத்தை நடத்தவும் தற்போது இருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றன.
