
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் நேற்று திருக்கார்த்திகை தீபத் திருவிழா 2025 நடைபெறவுள்ளதை முன்னிட்டு திருவண்ணாமலை மாநகராட்சியில் அமைக்கப்பட்டு வரும் தற்காலிக பேருந்து நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழாவானது வருகின்ற 03.122025 அன்று நடைபெறுவதை முன்னிட்டு வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிளான குடிநீர். கூடுதல் சுகாதார வளாகங்கள், போக்குவரத்து வசதிகள், மருத்துவ முகாம்கள் போன்ற பல்வேறு வசதிகளை அனைத்து துறைகளையும் ஒருங்கினைத்து மாவட்ட நிர்வாகம் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மேற்கொண்டு தொடர்ந்து கண்காணித்துவருகிறார். அனைத்து பணிகளையும் கள ஆய்வுஅதன்படி இன்றைய தினம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட மணலூர்பேட்டை சாலையில் உள்ள தற்காலிக பேருந்து நிலையம் மற்றும் செங்கம் சாலையில் உள்ள அத்தியந்தல் ஆகிய இடங்களில் உள்ள தற்காலிக பேருந்து நிலையங்களில் பொதுமக்கள் வசதிக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் வசதிகள், நிழல் கூடம் அமைக்கும் பணி, வழிக்காட்டி பலகைகள் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை ஆய்வு மேற்கொண்டு, மழை பெய்தாலும் நீர் தேங்காத வண்ணம் நீரை வெளியேற்ற தேவையான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், காவல்துறை
மற்றும் போக்குவரத்துத்துறை அலுவலர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
இந்த ஆய்வின் போது திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சதீஸ்குமார். மாநகராட்சி ஆணையர் செல்வபாலாஜி, திருவண்ணாமலை வட்டாட்சியர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
