தென்னிந்தியாவில் தங்களது கிளைகளை வலு படுத்தும் வகையில் ஹோம்ஸ் டூ லைப் பர்னிச்சர் நிறுவனம் கோவையில் தங்களது இரண்டாவது கிளையை கோவை திருச்சி சாலை, ஒண்டிப்புதூர் பகுதியில் அறிமுகம் செய்துள்ளது…

ஹெச்டிஎல் குழுமத்தின் ஆதரவு பெற்ற, சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்ட உயர்தர பிரீமியம் ஃபர்னிச்சர் விற்பனை நிறுவனமான, ஹோம்ஸ் டூ லைப் நிறுவனம் தென்னிந்தியாவில் தங்களது, கிளைகளை வலுப்படுத்தும் வகையில் கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் தங்களது, இரண்டாவது கிளையை துவங்கியது. வீடுகளை அழகு படுத்தும் மெத்தைகள், டைனிங் டேபிள்கள், சோபாகள், இங்கு உயர் ரக வகையில் காட்சிப்படுத்தியுள்ளது. இக்கிளையின் திறப்பு விழாவானது ஹோம்ஸ் ஜோன் நிறுவனத்தின் நிறுவனர் ராஜ் மாரியப்பனுடன் இணைந்து திறக்கபட்டுள்ளது. இதனை அவர் ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கேற்றி வைத்தும் துவக்கி வைத்தார்
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜ் மாரியப்பன் கூறியதாவது..
50க்கும் மேற்பட்ட நாடுகளில் எங்களது நிறுவனம் பல்வேறு வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்துள்ளது. இந்த ஆண்டு தங்களது 50ம் ஆண்டு செயல்பாட்டு விழாவை கொண்டாடி வருகின்றது என்றார். சர்வதேச வடிவமைப்பு நிபுணத்துவம் மற்றும் துல்லியமான பொறியாளர்களின் கை வண்ணத்தில் உருவான இவைகள், உங்களது வீடுகளின் அழகை வலுப்படுத்துவதுடன், நீடித்த தரத்தையும் வழங்குகின்றது என்றார். நாடு முழுவதும் 22 மாநிலங்களில், 35க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களை கொண்டுள்ள இந்த நிறுவனம் கோவையில் தங்களது இரண்டாவது கிளையை துவங்குவது எங்களுக்கு பெருமையளிக்கும் செயலாக உள்ளது என்றார். நேர்த்தியான வடிவமைப்புகளை மக்கள் அதிக அளவில் விரும்பிவருகின்றனர் இதன் காரணமாகவே முதல் கிளை துவங்கபட்ட சில மாதங்களிலேயே இரண்டாம் கிளை துவக்க பட்டுள்ளது என்று தெரிவித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் பொழுது ஹோம்ஸ் டூலைப் இந்தியா தலைவர் வருண் காந்த் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.