நலிந்த இசைக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் கோவையில் அடுத்த மாதம் ராக சங்கமம் எனும் தலைப்பில் இசை நிகழ்ச்சி கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.

கோவை மாவட்டம் மருதமலை அடுத்த ஐஓபி காலனி பகுதியில் கோவை மாவட்ட இசை கலைஞர்கள் நல சங்கத்தின் சார்பாக செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது அப்பொழுது
ராக சங்கமம் எனும் இசை நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களான சரவணக்குமார், கண்ணன், கோவை மாவட்ட இசை கலைஞர்கள் நலச்சங்க துணை செயலாளர் ஆனந்த், கோவை மாவட்ட இசை கலைஞர்கள் சங்க பொருளாளர் வெற்றிவேல், கோவை மாவட்ட இசை கலைஞர்கள் நல சங்க தலைவர் சாமுவேல்ராஜன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது..
கோவையில்
நலிந்த இசை கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்காக, கோவையில் ராகசங்கம் எனும் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இந்த நிகழ்ச்சியானது வரும் அன்று, கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது எனவும், கலை என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமின்றி, அது ஒரு சமூகத்தின் அடையாளம் எனவும், அந்த அடையாளத்தை தாங்கிப் பிடிக்கும் தூண்களாக திகழ்பவர்கள் நம் இசைக் கலைஞர்கள். ஆனால் துரதிஷ்டவசமாக பல திறமையான கலைஞர்கள் இன்று முறையான வருமானம் இல்லாமல் வறுமையில் வாடி வருகின்றனர். அவர்களின் வாழ்வில் ஒளி ஏற்ற இசையால் இணைவோம் இசை கலைஞர்களின் வாழ்வினை காப்போம் என கருத்தை முன்வைத்து ராக சங்கமம் என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளதாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின் மூலமாக திரட்டப்படும் நிதி முழுமையாக நலிந்த நிலையில் உள்ள இசை கலைஞர்களின் மருத்துவ செலவுகள், கல்விஉதவி, மற்றும் அடிப்படை தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டு அவர்களின் பங்களிப்பாக சில பாடல்களை பாடி ஆதரவு திரட்ட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது