கோவையில் ரிசலியோ தி பைன் கிளினிக் எனும் மருத்துவமனையில் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது நாள்பட்ட வலிகளுக்கு அறுவை சிகிச்சை என்று நிரந்தர தீர்வு வழங்குவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

வலி மருத்துவத்துறையில், ஒரு முக்கிய மயில்கல்லாக கோவையில் பிரத்தியேக மேம்பட்ட குறைந்த தலையிட்டு சிகிச்சையாக, நாள்பட்ட வலி சிகிச்சை மையமான ரெசிலியோ தி பெயின் கிளினிக் எனும் மருத்துவமனை கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் திறக்கப்பட்டுள்ளது. இதனை ஆக்சான் அனஸ்தீஷியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள கேர் மருத்துவமனைகளின் கிளினிக்கல் இயக்குனரான டாக்டர் டி வி எஸ் கோபால் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். விழாவின் ஒரு பகுதியாக கோவை பார்க் கல்வி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் அனுஷா ரவி குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். திறப்பு விழாவை தொடர்ந்து வலியற்ற கோவை எனும் விழிப்புணர்வு இயக்கத்தின் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இயக்கத்தை தமிழ்நாடு காவல்துறையின் முன்னாள் காவல்துறை கூடுதல் இயக்குனர் பாரி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். நவீன வழி மேலாண்மை முறைகள் குறித்த சிறப்பு கருத்தரங்கை ரெசிலியோ தி பெயின் க்ளினிக் மருத்துவமனையின் நிறுவனரும், வலி மருத்துவ சிகிச்சை நிபுணரான டாக்டர் செந்தில் பிரகாஷ் மோகன் நடத்தினார். இந்த நிகழ்வில் கூடுதலாக, தமிழக கிரிக்கெட் வீரர் ஹரி நிஷாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டு காயங்கள், மறுவாழ்வு சிகிச்சை, மற்றும் வலியின்றி விரைவாக இயல்பு நிலைக்கு திரும்ப உதவும் மீளுருவாக்க மருத்துவத்தில் வளர்ந்து வரும் பங்கு குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். ரெசிலியோ தி பெயின் கிளினிகில், அறுவை சிகிச்சை இன்றி வழங்கப்படும் மேம்பட்ட நவீன வழி சிகிச்சை, முறைகளில் சிறந்து விளங்குகின்றது எனவும், இதில் மீளுருவாக்க சிகிச்சை, ரேடியோ ப்ரிக்வென்சி அப்லேஷன், நரம்பியல் ஒழுங்குமுறை சிகிச்சை, மற்றும் ஓசோன் சிகிச்சை உள்ளிட்ட நவீன சிகிச்சை முறைகள் இங்கு வழங்கப்பட உள்ளது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் அங்கீகாரம் பெற்ற டே கேர் சிகிச்சை நடைமுறைகளும் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன, 15 ஆண்டுகளுக்கும் மேலான மருத்துவ அனுபவம் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிகரமான சிகிச்சைகளை நடைமுறை ஆதரவுடன் இங்கு செயல்படும் இந்த கிளினிக் நாள்பட்ட வலியின் சிகிச்சை மற்றும் மேலாண்மை முறைகளில் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று டாக்டர் செந்தில் பிரகாஷ் மோகன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது