தைப்பூசத்தை முன்னிட்டு ஏரியூரில் உள்ள ஸ்ரீ காவடி பழனியாண்டவர் திருக்கோவிலில் பால் அபிஷேகம்.

தைப்பூசத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள முருகன் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக காவடி எடுத்தும் அழகு குத்தியும் நடைப்பயணம் ஆகவும் பேரணியாகவும் சென்று தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நாளை தைப்பூச திருவிழா உலகம் முழுவதும் உள்ள முருகர் கோயில்களில் வெகு விமர்சையாக முருகன் பக்தர்களால் வழிபாடுகள் நடைபெறும்.
இந்த நிலையில் நாளை தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஏரியூர் பகுதியில் உள்ள ஸ்ரீ காவடி பழனியாண்டவர் திருக்கோவிலில் தைப்பூச திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சுமார் 200 முருகர் பக்தர்கள் பால், தயிர், தேன், இளநீர், தீர்த்தம், சந்தனம், திருமஞ்சனம், பன்னீர், திருநீர் உள்ளிட்ட அபிஷேக குடங்களை எடுத்து கரகம் ஆடி அழகு குத்தி சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் தீர்த்த குடங்கள் எடுத்து ஏரியூர் பகுதியில் உள்ள ஸ்ரீ காவடி பழனியாண்டவர் திருக்கோவிலில் உள்ள முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணி அளவில் திருவீதி உலா நடைபெறும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாளை தைப்பூச திருநாள் என்பதால் அப்பகுதியில் உள்ள முருகன் பக்தர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட உள்ளது,இந்த நிகழ்வில் ஏராளமான முருக பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.