
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சி 18 வது வார்டு கோடியூர். இந்தப் பகுதியில் சுமார் 400 இருக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பென்னாகரத்தில் இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதிக்கு தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது .ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக இந்த தார் சாலையானது குன்டும் குழியமாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அன்றாட பணிக்கும் பள்ளி மாணவர்கள் கர்ப்பிணி பெண்கள் முதியவர்கள் விவசாயிகள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் விபத்து அவசர தேவைக்காக செல்ல வேண்டுமென்றால் 108 ஆம்புலன்ஸ் கூட வருவதில்லை அப்படி வந்தாலும் காலதாமதமாக வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் கர்ப்பிணி பெண்கள் வயதானவர் நோயால் பாதிக்கப்பட்டோர் இந்த வழியாக செல்லும் பொழுது உயிர் இழப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சட்டி வருகின்றனர். இதேபோல் கோடியூர் வீதிகளில் தெருவிளக்கு கூட எரிவதில்லை. வீதிகளில் அமைக்கப்பட்டிருந்த சாக்கடை கால்வாய் சுத்தம் செய்வதில்லை எனவே மழைக்காலங்களில் சாக்கடை நிரம்பி வழிவதால் துர்நாற்றம், ஈசி கொசுக்கள் அதிகளவில் வருகின்றன. இதனால் இந்த பகுதியில் தொற்றுநோய் பரவி வருவதாக பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். சட்டமன்ற நாடாளுமன்ற நகர மன்ற எந்த தேர்தல் வந்தாலும் தேர்தல் காலங்களில் வாக்கு கேட்டு மட்டும் அரசியல் கட்சி பிரமுகர்கள் வருகின்றனர். ஆனால் அப்பொழுது மட்டும் வாக்குறுதியாக சொல்கின்றனர். ஆனால் இந்தப் பகுதிக்கு எந்தவித அடிப்படை வசதியும் செய்தி தரவில்லை. எனவே அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி தேர்தல் புறக்கணிப்பு பேனர் வைத்து கருப்பு கொடி கட்டி கொடியூர் கிராமத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியும் ஓட்டு கேட்க யாரும் வர க்கூடாது எங்களது கிராமத்திற்கு செல்லும் தார் சாலை அமைக்காமல் எந்த ஒரு அரசியல் கட்சியும் வரக்கூடாது என்று பொதுமக்கள் கண்டனத்தை தெரிவித்து பேனர் வைத்து போராட்டம் செய்தனர்.
