பெரியநாயக்கன்பாளையம் அருகே கழிவு நீர் ஓடையில்அழுகிய உடல் மீட்பு கொலையா? தற்கொலையா?போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே கழிவு நீர் ஓடையில் அழுகிய நிலையில் 38 வயதான ஸ்ரீகாந்த் என்பவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. உடலை கைப்பற்றிய பெரியநாயக்கன்பாளையம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து கொலையா? தற்கொலையா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 4 நாட்களாக ஸ்ரீகாந்தை காணவில்லை என அவரது மனைவி தெரிவித்த நிலையில் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் பகுதியில் உள்ள கழிவு நீர் ஓடையில் இன்று காலை அழுகிய நிலையில் ஒருவரது உடல் மிதப்பதாக பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றிய பெரியநாயக்கன்பாளையம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து கொலையா? தற்கொலையா? என விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் மீட்கபட்ட உடல் கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தா ஸ்ரீகாந்த் என்பதும் 38 வயதான இவர் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் தெரியவந்துள்ளது.

மேலும் கடந்த 27ம் தேதி என் ஜி ஜி ஓ காலனி செல்வதாகவும் கஸ்டமரை சந்தித்து வருவதாக கூறி சென்றதாகவும் இதுவரை வீடு திரும்பவில்லை என்றும் இவரது மனைவி மரிய பினித்ரா விம்ஸ் கூறுயுள்ளார். கழிவு நீர் ஓடையில் அழுகிய நிலையில் உடல் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.