
ஒகேனக்கல் வனத்துறை சார்பில் போடூர் அரசு துவக்கப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு யானைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தமிழ்நாடு அரசு வனத்துறை மற்றும் ஆசிய பன்னாட்டு யானை நிறுவனம் and Zoo Outreach Organisation’ இணைந்து தமிழகத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கும் பள்ளி குழந்தைகளுக்கும் வன விலங்குகள் குறிப்பாக யானைகள் பற்றிய விழிப்புணர்வு நடத்தி வருகின்றது இதன் தொடர்ச்சியாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதிகளில் வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராம மக்களுக்கு வன உயிரினங்கள் குறிப்பாக யானைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த தர்மபுரி வன மண்டல தலைமை வன பாதுகாவலர் உத்தரவின் பேரில் தர்மபுரி மாவட்ட வன அலுவலர் மேற்பார்வையில் யானைகளுடன் இசைந்து வாழ்தல் என்ற தலைப்பில் ஒகேனக்கல் வனப்பகுதி ஒட்டி உள்ள போடூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் பென்னாகரம் அரசு பள்ளியில் வனவிலங்குகள் குறிப்பாக யானைகள் பற்றி பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஒகேனக்கல் வனச்சரக அலுவலர் சிவகுமார் தலைமையில் ஆசிய பன்னாட்டு யானை நிறுவனம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்வில் வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமங்களில் வசிக்கும் பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள் இரவு நேரங்களில் செல்லும் பொழுது கைவிளக்கு அல்லது தொலைதூரம் அடிக்கக்கூடிய டார்ச் லைட் எடுத்துச் செல்ல வேண்டும் யானைகள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் வனப்பகுதி ஒட்டி உள்ள விவசாய நிலங்களில் யானை உண்ணக்கூடிய கரும்பு வாழை தேங்காய் உள்ளிட்ட பயிர்களை செய்யக்கூடாது யானைகள் நடமாட்டம் இருந்தால் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று பெற்றோர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் யானைகளை அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் ஒகேனக்கல் வனச்சரக அலுவலர் சிவகுமார் பள்ளி மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வனவர்கள் சுதாகர் , மகேஸ்வரி ,சுவாதி மற்றும் வனக்காப்பாளர்கள் காளிமுத்து ,சுஜாதா மற்றும் போடூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் சாமிநாதன் ஆசியன் பன்னாட்டு யானை நிறுவனம் குழுவினர் மாரிமுத்து, பாபு ,அலாவுதீன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் வனப் பணியாளர்கள் கலந்து கொண்டன
