விருந்தீஸ்வரர் திருக்கோவில் ஆருத்ரா தரிசனம்நடராஜருக்கு மஹா அபிசேகம், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்திருவீதி உலா மற்றும் அன்னதானம் நடைபெற்றது

கோவை துடியலூர் அடுத்துள்ள வடமதுரையில் 300 வருடங்களுக்கு மேல் பழமையான அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோவிலில் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரம் ஆருத்ர தரிசனம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் நடராஜருக்கு மஹா அபிசேகமும், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து திருவீதி உலா மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திர நாளில் சிவபெருமானை நடராஜராக தரிசிக்கும் மிகப் புனிதமான திருநாளாகும். மார்கழி மாதத்தில் வரும் பௌர்ணமியும், திருவாதிரை நட்சத்திரமும் இணையும் நாளன்று ஆருத்ரா தரிசனம் மிகக் கோலாகலமாகத் கொண்டாடப்படுகிறது.

அதேபோல் கோவை துடியலூர் அடுத்துள்ள வடமதுரையில் 300 வருடங்களுக்கு மேல் பழமையான அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோவிலில் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரம் ஆருத்ர தரிசனம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

அதிகாலை 4 மணியளவில் நடை திறக்கப்பட்டு, ஆடல்வல்லான் நடராஜப் பெருமானுக்கும் சிவகாமி அம்பாளுக்கும் பால், தயிர், தேன், இளநீர், சந்தனம் மற்றும் பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு மகா அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, சுவாமிக்கு விபூதி காப்பு சாத்தப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் மாணிக்கவாசகர் இயற்றிய திருவெம்பாவை பாடல்களைப் பாடி இறைவனை வழிபாடு செய்தனர்.

மேலும் இறைவனுக்கு பழங்கள், மலர்கள், பிரசாதம் படைத்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து சுவாதி திருவீதி உலா நடைபெற்றது. இதில் நடராஜப் பெருமான், சிவகாமி அம்பாள் கோவிலைச் சுற்றி உலா வந்து கோவிலை அடைந்ததும் பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.

இதில் தயாநிதி குருக்கள் தலைமையில் சிவனடியார்கள் இறைவனுக்கு அபிசேக, அலங்கார பூஜைகளை செய்தனர். இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பொங்கள், சுண்டல், தயிர் சாதம் உள்ளிட்ட பிரசாதங்கள் அன்னதானமாக வழங்கப்பட்டது.

இவ்விழா அருள்மிகு விருந்தீஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் பி வி மணி தலைமையில் நடைபெற்றது. இதில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அம்சவேணி பழனிச்சாமி, சாமிநாதன், குருடம்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் டி ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை வேல் முருகன், சேகர், கோவில் பிரதோஷ குழுவினர், செல்வகுமார், ரவிச்சந்திரன், தமிழ் செல்வன், மோகனசுந்தரம், விஜயகுமார், தம்பி, பாபு, விபின், அபிச்சந்திரன், ஜெயபால், காளிதாஸ், அருணாச்சலம், கண்ணன், சுரேஷ், ஆர் விஜயன், ஜோதிமணி, கலா, ஜெயக்கொடி, பேபி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.