
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் அடுத்த ஆவத்துவாடி கிராமத்தில், ஆடிக் கிருத்திகை நன்னாளை முன்னிட்டு இன்று சிறப்பான வழிபாடுகளும் ஆன்மீக நிகழ்வுகளும் விமரிசையாக நடைபெற்றன.
ஆடிக் கிருத்திகையான இன்று, ஆவத்துவாடி கிராமத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் அருகிலுள்ள புகழ்பெற்ற கந்தர்மலை மீது எழுந்தருளியுள்ள பாலமுருகன் கோயிலுக்குச் சென்று தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.விழாவையொட்டி அதிகாலை முதலே பக்தர்கள் விரதமிருந்து, முருகன் புகழ்பாடும் பாடல்களைப் பாடியவாறு ஊர்வலமாகச் காவடி & பால் காவடி: வண்ணமயமான மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்பகாவடி, மயில் காவடி மற்றும் பால்காவடிகளை பக்தர்கள் தலையிலும் தோளிலும் சுமந்து சென்றனர்.மேலும் பல பக்தர்கள் மெய்சிலிர்க்கும் வகையில் முதுகில் அலகு குத்தி, சங்கிலியால் வாகனங்களை இழுத்துச் சென்று தங்களது தீவிர பக்தியை வெளிப்படுத்தினர்.ஆவத்துவாடியிலிருந்து புறப்பட்ட இந்த ஆன்மீக ஊர்வலம், கந்தர்மலை அடிவாரத்தை அடைந்து, மலையேறி மலை மீதுள்ள முருகன் கோயிலை சென்றடைந்தது. அங்கு முருகப்பெருமானுக்குப் பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. அப்போது பக்தர்கள் ”அரோகரா” ”அரோகரா” என்று கோஷ மிட்டு வழிப்பட்டனர்.
