
ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பணிகள் வந்து செல்கின்றனர் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் இருக்கவும் இன்று போகி பண்டிகை கொண்டாடப்படுவதாலும் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கவும் புகையில்லா போகியை கொண்டாடவும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணிக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுலாத்துறை மற்றும் வட்டார வளர்ச்சி துறை சார்பில் தூய்மை பணியாளர்கள் கூத்தப்பாடி பஞ்சாயத்து பணியாளர்கள் ஒன்றிணைந்து இந்தப் பேரணி நடைபெற்றது இந்தப் பேரணியில் மாவட்ட உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கிருஷ்ணன் ,மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கீதா ,பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சக்திவேல் ,லோகநாதன் ஆகியோர் இந்த பேரணியில் கலந்து கொண்டு ஒகேனக்கல் பேருந்து நிலையம், அருவிக்குச் செல்லக்கூடிய நடைபாதை, மீன் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் பேரணியாக சென்று அப்பகுதியில் உள்ள கடை உரிமையாளர்களுக்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பற்றி அச்சிடப்பட்ட நோட்டீஸ் வழங்கி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்பு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த கடை உரிமையாளர்களுக்கு அபராதம் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ஒன்றிய பொறியாளர் (AE) தமிழரசு, ஒன்றியம் மேற்பார்வையாளர் செல்வம் (ஓவர்சீர்) பென்னாகரம் திமுக மத்திய ஒன்றிய பொறுப்பாளர் பச்சியப்பன், முன்னாள் ஒன்றிய செயலாளர் மடம் முருகேசன் மற்றும் அரசு அலுவலர்கள் தூய்மை பணியாளர்கள் கூத்தப்பாடி பஞ்சாயத்து பணியாளர்கள் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
