ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 6 நாட்களுக்குப் பிறகு சுற்றுலா பணிகளுக்கு குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி.

கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீரால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியது இதனால் சில தினங்களுக்கு முன்பு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் அதிகரித்தது இந்த நீர்வரத்து காரணமாக சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளிக்கவும்,பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.

இந்த நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரானது படிப்படியாக குறைக்கப்பட்டதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. இந்த நிலையில் நேற்று வினாடிக்கு 18,000 கனடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 16 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது இந்த நீர்வரத்து குறைந்ததன் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு நேற்று பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் இன்று 6 நாட்களுக்குப் பிறகு குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.