ஒகேனக்கல் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தில் வாங்க கற்றுக் கொள்வோம் தீ பாதுகாப்பு அறிவோம், உயிர்களை காப்போம் பயிற்சி வகுப்பு நடைபெற்றது

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தில் தீ விபத்துகளை தடுக்க இலவச பயிற்சி வகுப்பு  இரண்டு நாள் நடைபெற உள்ள நிலையில். இன்று தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா உத்தரவின் பேரில், ஒகேனக்கல் பொறுப்பு நிலை அலுவலர் முனுசாமி முன்னிலையில் நேரடி செயல் விளக்கம் மற்றும் நவீன தீயணைப்பு இயந்திரங்களின் செயல்பாடு மற்றும் பல்வேறு வகையான தீ விபத்துகளுக்கு ஏற்ப சமையல் எரிவாயு, மின்கசிவு எந்தெந்த கருவிகளை, எங்கு, எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும். அவசரகால நேரங்களில் கட்டிடத்தை விட்டுப் பாதுகாப்பாக வெளியேறுவது எப்படி, புகை மண்டலத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வது போன்ற செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டது.பின்னர் அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளுக்கு, பொதுமக்களுக்கும் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் ஆற்றங்கரை மற்றும் அருவி பகுதிகளில் தண்ணீரில் குளித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராது நடக்கும் விபத்துகளின் பொழுது எவ்வாறு தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு விபத்து ஏற்படும் நிலையில், அருகில் இருக்கும் தீயணைப்பு நிலையங்களின் எண்ணை எவ்வாறு தொடர்பு கொண்டு தகவல் அளிப்பது, குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விபத்தில்லா சூழலை உருவாக்கவும், விபத்து காலங்களில் துரிதமாக செயல்பட்டு உயிர் சேதத்தைத் தடுக்கவும், பொதுமக்கள் அனைவரும் , தீ பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொள்ளுமாறு தீயணைப்புத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. இந்த நிகழ்வில் ஒகேனக்கல் தீயணைப்பு நிலைய பணியாளர்கள் முனுசாமி, இளவரசன், சேவகன், சிவா மற்றும் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் என யாராலமானவர் கலந்து கொண்டனர்