
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் விடுமுறை நாட்களிலும் வார விடுமுறை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்த நிலையில் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு வரக்கூடிய இரண்டு வழி சாலைகளும் வனப்பகுதிக்கு நடுவே அமைந்துள்ள சாலையாக இருந்து வருகிறது. இதனால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு வரும் சுற்றுலாப் பணிகள் தங்கள் வாகனங்களை வனப்பகுதி ஓரங்களில் நிறுத்தி உணவு உண்ணுவது மது அருந்துவது மற்றும் பல குற்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கும் விதமாக தர்மபுரி மண்டல தலைமை வன பாதுகாவலர் உத்தரவின் பேரில் தர்மபுரி மாவட்ட வன அலுவலர் அறிவுறுத்தலின்படியும் ஒகேனக்கல் வனச்சரக அலுவலர் சிவக்குமார் தலைமையிலான வனக்குழுவினர். ஒகேனக்கல் வனச்சரக எல்லைக்கு உட்பட்ட மடம் வன சோதனை சாவடி வனப்பகுதியில் இருந்து வன சாலை பகுதிகளான முண்டச்சி பள்ளம், புளியந்தோப்பு, பண்ணப்பட்டி, சின்ன ஆஞ்சநேயர் கோவில் ஒட்டப்பட்டி, ஊட்டமலை ,நாடார் கோட்டை,ஆலம்பாடி, முயல் மடுவு உள்ளிட்ட வன சாலையை ஒட்டி உள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வனப்பகுதிகளில் மது அருந்துவது உணவு உண்பது குப்பைகளை வனப்பகுதியில் வீசிச் செல்வது வாகனங்களை வனப்பகுதியில் நிறுத்துவது உள்ளிட்ட குற்ற சம்பளத்தில் ஈடுபடும் சுற்றுலா பணிகள் மீதும் வாகன ஓட்டிகள் மீதும் நடவடிக்கை எடுக்கும் விதமாக இணக்க கட்டணம் அவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து ஒகேனக்கல் வனச்சரக அலுவலர் சிவகுமார் கூறும்பொழுது ஒகேனக்கல் செல்லக்கூடிய சாலையானது 16 கிலோமீட்டர் தொலைவில் வனப்பகுதி நடுவே அமைந்துள்ள சாலையாக உள்ளது. இப்பகுதியில் செல்லக்கூடிய சுற்றுலாப் பணிகள் தங்கள் வாகனங்களை வனப்பகுதியில் நிறுத்தவோ மது அருந்துவோ உணவு உண்ணவோ மற்றும் வனப்பகுதிக்குள் செல்லவோ தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில் இதை மீறும் சுற்றுலாப் பணிகளுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் தலா ஆயிரம் ரூபாய் இணக்க கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவித்தார்.
