
பென்னாகரத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடந்தது . இந்த வளைகாப்பு விழாவானது தனியார் திருமண மண்டபத்தில் 150-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது இதில்
கர்ப்பிணிகளுக்கு தாம்பூல தட்டு, வளையல், புடவை,குங்குமம்,மஞ்சள், வாழைப்பழம் ,உலர் திராட்சை ,பேரிச்சம்பழம் ,வெற்றிலை பாக்கு உள்ளிட்ட பொருள்கள் வழங்கி பூ மாலை அணிவித்து சீர்வரிசைகள் வழங்கப்பட்டு மூன்று வகையான சாப்பாடுகள் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்டது . இந்த நிகழ்ச்சியில் ஜி.கே .மணி எம் எல் ஏ பங்கேற்று சீர்வரிசைகளை வழங்கினார். அதைத்தொடர்ந்து கர்பிணிகளுக்கு நலங்குவைத்து வளைகாப்பு நடத்தப்பட்டது . இந்த நிகழ்வில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சத்யா வட்டார மருத்துவ அலுவலர் ராமதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
