கீழ்பென்னாத்தூர் அருகே இயற்கை வளங்களை அழிக்கும் நிலையில் மலையை சுரண்டி மணல் கடத்தி வரும் கும்பலை கண்டறிந்துகைது செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டம் சோமாஸ்படி அருகே அரியாங்குப்பம் கிராமத்தில் இயற்கை வளங்களை அழிக்கும் நிலையில் அப்பகுதியில் உள்ளமலைகள் சுரண்டு மணல் திருட்டை ஒழிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இயற்கை வளர்க்க வேண்டும் என குறிக்கோளில் தமிழகம் முழுவதும் பல்வேறு மரங்கள் கன்றுகளை நட்டு வருகின்றனர் இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ள எ.வ. வேலு அவர்கள் இயற்கை வளம் பெருக வேண்டும் என தமிழக முதலமைச்சரின் கொள்கையை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பண்ணை மர விதைகள் நட்டு வருகின்றனர் இந்நிலையில் சோமாசுபடி அருகே அரியாங்குப்பம் கிராமத்தில் சுட்டு வட்டார பகுதியில் மலையை சுரண்டு மணல் கடத்தி வருகின்றனர் இதனை கண்டு கொள்ளாத மாவட்ட நிர்வாகம் வட்டார நிர்வாகத் மற்றும் காவல்துறையினர் எனவே இயற்கை அழிக்கும் நிலையில் மலைகளை சுரண்டும் மணல் கொள்ளையர்களை மாவட்ட நிர்வாகம் கண்டறிந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் மற்றும் மணல் கொள்ளையடிக்கும் வாகனங்களை பறிமுதல் செய்து அவர்களுக்கு நீதிமன்றத்தில் நிறுத்தி இயற்கை வளங்களை அழித்து வரும் இவர்கள் மீது குண்டர் சட்டம் பாய வேண்டுமென ஆ பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழக முதல்வர் இயற்கை வளமாக மாற வேண்டும் என மரக்கன்றுகள் நட்டு வருகின்றனர் ஆனால் சில ஆசாமிகளோ பண விதைகளை அழிக்கும் நிலையில் மலைகளை சுரண்டு மணல் கொள்ளை அடிக்கும் கும்பல்களை மீது ஊறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்

பொதுப்பணித்துறை அமைச்சரும் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களும் திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகளை நட்டு இயற்கை வளத்தை பெருக்கும் நிலையில் செயல்பட்டு வருகின்றனர் ஆனால் சில ஆசாமிகளோ மலைகளை சுரண்டு மணல் கொள்ளை அடித்து வரும் அது மட்டுமில்லாமல் பண விதைகளை அழித்து மணல் கொள்ளை அடிக்கும் கும்பல்களை மீது குண்டர் சட்டம் பாய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்