கூலி வேலை செய்து வரும் என்னை கட்டையால் தாக்கியும் தனது குடும்பத்தை கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுபவர்களை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் குறிசிலாப்பட்டு காவல் நிலைய காவலர்கள் எடுக்கவில்லை என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த நடராஜ் 60 தனக்கு சொந்தமான நிலத்தினை தன் உடன் பிறந்தவர்கள் அபகரிக்கும் நோக்கத்தில் செயல்படுவதால் தன் மீது இருந்த சொத்தினை தனது மனைவி மாது மீது பத்திர பதிவு செய்து கொடுத்துள்ளேன்
பின்பு 7.9.25 அன்று தனது சொத்தினை முள்வேலி அமைப்பதற்கு வேலை செய்து வந்தேன் அப்பொழுது ஆறுமுகம் அவரது மகன் சரண்ராஜ் ஆகிய இருவரும் அவருடைய சொத்து என என்னை கட்டையால் தாக்கி உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்து பலமாக தாக்கினார்கள் எனக் கூறுகிறார்
பின்பு உடனடியாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டேன் அதன் பேரில் குருசிலாப்பட்டு காவல் நிலையத்தில் ஆறுமுகம் மற்றும் சரண்ராஜ் மீது வழக்கு பதிவு செய்தார்கள்
வழக்கு பதிவு செய்து இன்று வரை எந்த ஒரு நடவடிக்கையும் குருசிலா பட்டு காவல் நிலைய காவலர்கள் எடுக்கவில்லை எனவும் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் மணி அலட்சியமாக பதில் கூறி வருகிறார்கள் எனவும் தெரிவிக்கிறார்
மேலும் நான் இல்லாத பொழுது எனது குடும்பத்தினை கொலை செய்து விடுவார்கள் என பயமாக உள்ளது எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் காவல்துறையே இப்படி செய்தால் நாங்கள் இங்குதான் போவது என கூறுகிறார்
பின்பு இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடராஜ் தன்னை கட்டையால் தாக்கியும் தனது குடும்பத்தை கொலை மிரட்டல் விடுத்தும் வழக்குப்பதிவு செய்தும் வெளியே சுற்றித் திரியும் ஆறுமுகம் அவரது மகன் சரண்ராஜ் ஆகிய இருவரையும் உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது