கோவையில் இந்தியாவின் மிகப்பெரிய உணவுத் துறை சார்ந்த கண்காட்சிவரை கொடிசியா வளாகத்தில் நடைபெறுகிறது இதில், சுமார் 36 நாடுகளைச் சேர்ந்த 30,000-க்கும் மேற்பட்ட தொழில்துறை வல்லுநர்கள் பங்கேற்க உள்ளதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தென்னிந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த தொழில்துறை கண்காட்சியாக கருதபடும், உணவுத் துறையை மையமாகக் கொண்ட ஆறு முக்கிய கண்காட்சிகளான, இந்தியாவின் மிகப்பெரிய உணவுத் துறை சார்ந்த கண்காட்சி வரும் வரை கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற உள்ளது இது குறித்த விளம்பர பலகை வெளியீட்டு விழா நிகழ்ச்சி கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் உணவக அரங்கில் நடைபெற்றது. அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய சினர்ஜி எக்ஸ்போஷர்ஸ் அன்ட் ஈவென்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் பிரிஜேஷ் எட்வர்ட்ஸ் கூறியதாவது. தென்னிந்தியாவில் உள்ள உணவு வணிக நிறுவனங்களுக்கு, உணவு பதப்படுத்துதல், பேக்கரி, உணவு உற்பத்தி இயந்திரங்கள், பேக்கேஜிங் மற்றும் விருந்தோம்பல் துறைகளில் உருவாகி வரும் நவீன தொழில்நுட்பங்களையும் புதுமைகளையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது இக்கண்காட்சி.
இந்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம், இந்திய மசாலா வாரியம், தேசிய மஞ்சள் வாரியம் மற்றும் பல்வேறு முன்னணி தொழில்துறை அமைப்புகளின் ஆதரவுடன் நடைபெறும் இந்தக் கண்காட்சியில், 36 நாடுகளைச் சேர்ந்த 30,000-க்கும் மேற்பட்ட தொழில்துறை வல்லுநர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாபெரும் தொழில்துறை நிகழ்வில், உணவு பதப்படுத்துதல், பானங்கள், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள், பேக்கரி மற்றும் இனிப்பு தயாரிப்புகள், உணவு பேக்கேஜிங், ஹோட்டல் மற்றும் விருந்தோம்பல் துறை, வேளாண் தொழில் மற்றும் உணவு ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், விநியோகஸ்தர்கள், சில்லறை விற்பனையாளர்கள், ஹோட்டல் துறையினர், தொழில்முனைவோர், ஆலோசகர்கள் மற்றும் தொழில்நுட்ப வழங்குநர்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடுகின்றனர் என தெரிவித்தார் இந்த நிகழ்ச்சியில் நீலகிரி அக்கார்ட் ஹைலேன்ட் உணவக இயக்குநா் அருண் அண்ணாதுரை, டிஏபிபி ஸ்னாக்ஸ் நிறுவனர் பிரபு காந்தி குமார், ஸ்கால் இன்டர்நேஷனல் தலைவர் ரமேஷ் சந்திரன், ஜே. எம் பேக்கர்ஸ் அகாடமி இயக்குநர் லாரன்ஸ், சினர்ஜி எக்ஸ்போஷர்ஸ் அண்ட் ஈவென்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் தலைவர் ரஞ்சித், தமிழ்நாடு கேட்டரர்ஸ் அசோசியேஷன் தலைவர் முகேஷ் விஜ், மற்றும் விஷால் விஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.