கோவையில் காங்கிரஸ் கட்சி சார்பாக, நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள விஜயகுமாரின் சந்திப்பு கூட்டம், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி சார்பில் துடியலூர் அருகே உள்ள விஎஸ்கே நகரில் நடைபெற்றது. இதில் தலைவர் விஜயகுமாருக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். மேலும் நிர்வாகிகளுக்கு விஜயகுமார் கட்சி துண்டு அணிவித்தார்.

கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக முன்னாள் சர்க்கிள் தலைவர் விஜயகுமார் பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி சார்பில் தலைவர் விஜயகுமார் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.
துடியலூர் அருகே உள்ள விஎஸ்கே நகர் அரிமா சங்க அறக்கட்டளை அரங்கத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு முன்னாள் மாவட்ட தலைவர் பி வி மணி தலைமை தாங்கினார். வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் மோகன்ராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ் சுரேஷ் குமார், துணைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, சுரேந்திரபாபு, நாகராஜ், ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் பேசிய நிர்வாகிகள் கட்சியினை மேம்படுத்துவது குறித்து பேசினர். தொடர்ந்து பேசிய தலைவர் விஜயகுமார் அனைவரையும் அரவனைத்து செல்ல உள்ளதாகவும், தன்னை அனைவரும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார். அவருக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். மேலும் நிர்வாகிகளுக்கு விஜயகுமார் கட்சி துண்டு அணிவித்தார்.

இதில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பீளமேடு விஜயகுமார், ராஜாமணி, பழைய செல்வராஜ், ஐஎன்டியுசி மவுனசாமி, கவுன்சிலர் சாந்தாமணி பச்சைமுத்து, மாவட்டத் துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன், மாவட்ட பொருளாளர் சௌந்தரகுமார், மாவட்ட செயலாளர் சிவகுமார், ஐஎன்டியுசி சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.