
கோவை கவுண்டம்பாளையம் அடுத்த சரவணா நகர் பகுதியில், பெத்லஹேம் ஜாய் எனும் ஜெபவீடு அமைந்துள்ளது. இந்த ஜெபவீட்டின் சார்பாக 2026 புத்தாண்டை வரவேற்கும், சிறப்பு ஆராதனை துதி பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது..
கோவை கவுண்டம்பாளையம் அடுத்த சரவணா நகர் பகுதியில் உள்ள சாரல் மஹாலில் கோலாகலமாக நடைபெற்ற இந்த புத்தாண்டு விழா நிகழ்ச்சிக்கு, தலைமை போதகர் ஜான் பீட்டர்,தலைமை தாங்கினார். உதவி போதகர் ஜெயக்குமார், தலைமை மூப்பர் சந்திரன், ஆகியோர் முன்னிலையில் சிறப்பு பாடல்கள் படபட்டு 2026ம் ஆண்டை வரவேற்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. இதில் ஜெப வீட்டின் ஊழியர்கள் கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்து நள்ளிரவு 12 மணிக்கு ஒருவருக்கு ஒருவர் ஆரத்தழுவி கொண்டு புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறி கொண்டாடினர். இதனை தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்க பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் 2026ம் ஆண்டுக்கான நாள் காட்டி வழங்கபட்டது. தொடர்ந்து இரவு 2மணி வரை சிறப்பு விஷேச ஆராதனைகள் நடைபெற்றது. முன்னதாக, புத்தாண்டை வரவேற்கும் விதமாக, பெத்லஹேம் ஜாய் ஜெபவீட்டின் சகோதர சகோதரிகளின் நடன நிகழ்ச்சி, நாடகம், உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து பணியாளர் ராஜேஸ் பிரேம் குமார், அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை அமைப்பின் நிறுவன தலைவரும் வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான புஸ்பாணந்தம், ஜெபா, வர்ஷா, வர்ஷினி, மோகன் ராஜா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
