
தமிழகத்தின் தலைசிறந்த மருத்துவமனைகளில் ஒன்றாக கோவை ஜெம் மருத்துவமனை திகழ்ந்து வருகின்றது. கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் புற்றுநோய் சிகிச்சைகளை இம்மருத்துவமனை வழங்கி வருகின்றது. இந்த குறுகிய காலத்தில் பல நூற்றுக்கணக்கான புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக செப்டம்பர் 22ம் தேதி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆதரவையும், அன்பையும் வெளிபடுத்தும் வகையில் ரோஸ் தினம் எனும் நிகழ்ச்சியை நடத்தியது. வல்லமை தாராயோ எனும் தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியானது மருத்துவமனை வளாகத்தில் முதல் முறையாக நடைபெற்றது. இதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற நோயாளிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியினை ஜெயா பழனிவேலு, பிரபா பிரவீன் ராஜ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்

. ஜெம் புற்றுநோய் சிகிச்சை மையத்தின் இயக்குனர் டாக்டர் பரத் ரங்கராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார். ஜெம் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் பிரவீன் ராஜ், இம்மையத்தில் அளிக்க படும் புற்றுநோய் சிகிச்சை முறைகள் குறித்தும், அதற்கான வசதிகள் குறித்தும், மருத்துவமனையில் உள்ள அதிநவீன கருவிகள் குறித்தும் விளக்கவுரையாற்றினார். மேலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், புற்றுநோயால் பாதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற நோயாளிகளுக்கு மன உறுதியின் வலிமை குறித்து விளக்கவுரையாற்றினார். தொடர்ந்து ஜெம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பழனிவேலு அனைவரது மத்தியிலும் கூறியதாவது..
கடந்த 50 ஆண்டுகளாக புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் தனது பயணத்தை எடுத்துரைத்தார். அப்பொழுது கடந்த 10 ஆண்டுகளில் புற்றுநோய் சிகிச்சை பெருமளவு முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், பல நோயாளிகள் இந்த நோயில் இருந்து மீண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்தார். புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் நிச்சயமாக அவர்களை குணப்படுத்த முடியும் என உறுதியுடன் அனைவரது மத்தியில் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
