
கோவையை சேர்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் இருவர் 2025-ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை சிட்டிங் வாலிபால் போட்டிக்குத் தேர்வாகி தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
உலகக்கோப்பை சிட்டிங் வாலிபால் போட்டி, மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்காக ஆண்டுதோறும் நடைபெறுகிறது.2025-க்கான போட்டி அக்டோபர் 12 முதல் 18 வரை அமெரிக்காவில் நடைபெற உள்ளது.இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், சீனா, எகிப்து உள்ளிட்ட 16 நாடுகளைச் சேர்ந்த அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன.
இந்தியா சார்பில் பங்கேற்கும் அணிக்கு கோவையை சேர்ந்த வீரர்கள் அருள் பிரகாஷ், சுதாகர் இருவர் இடம் பெற்றுள்ளனர்.
இந்தியா பாரா அசோசியேஷன் சார்பில் ஹரியானா மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக தீவிரமாகப் பயிற்சியை முடித்துக்கொண்டு கோவைக்கு ரயிலில் திரும்பிய அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.அப்போது பேசிய அவர்கள்,உலகக்கோப்பை வெற்றியை நோக்கி இந்திய அணி சிறப்பாகத் தயாராகி வருகிறது.கடந்த ஒரு மாதம் எங்களுக்கான பயிற்சியை பாரா அசோசியேஷன் வழங்கியது.அமெரிக்கா பயணச் செலவுக்கு தமிழக அரசும், தன்னார்வ அமைப்பினரும் பொருளாதார ரீதியில் உதவி செய்ய வேண்டும்.மேலும்,இந்தியாவுக்காக நிச்சயம் உலகக்கோப்பையை கைப்பற்றி தமிழகத்திற்கு பெருமை சேர்ப்போம் என நம்பிக்கை தெரிவித்தனர்.
