
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பாப்பம் பட்டி பகுதியில், எல்ஜி மருத்துவமனையின், 24 மணி நேர க்ளினிக் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை, வசந்தா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சிதம்பர நாதன், ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கேற்றி வைத்தும் துவக்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய எல்ஜி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் கோபிநாத், மற்றும் எல்.ஜி மருத்துவமனையின் தலைமை மருத்துவரும், மருத்துவமனையின் நிர்வாக இயக்குநருமான லதா கோபிநாத் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது..
கோவை சூலூர் பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக, எல்ஜி மருத்துவமனை இயங்கி வருகின்றது. இங்கு சூலூர், பாப்பம் பட்டி, பட்டணம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகமான, தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றது. இங்கு சுமார் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு ஏற்படும் விபத்துகளால், அவர்கள் மருத்துவமனைக்கு வருவதற்குள் அதிகமான இரத்த போக்கு ஏற்படுகின்றது. இதனை கருத்தில் வைத்து, இந்த பகுதியில் 24 மணி நேர க்ளினிக் துவங்கபட்டுள்ளது. இந்த க்ளினிக்கில் 24 மணி நேரமும் அவசர சிகிச்சைக்காக மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தகம், தயார் நிலையில் இருக்கும், எந்த வித அவசர சிகிச்சையாக இருந்தாலும் மருத்துவர்கள் உடனுக்குடன், அவர்களை பார்த்து முதலுதவி வழங்குவார்கள் என்று கூறினார். மேலும் இங்கு தமிழக அரசின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க படும் என்றும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், எல்ஜி மருத்துவமனையின் எக்கோ மெஷின் மேளாளர் ஓம் பிரகாஷ், சாந்தி பீட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் குணசேகரன், ஹெச் ஆர் மேளாளர் ராதாமணி, மற்றும் கிருஷ்ணா காம்ப்ளக்ஸ் உரிமையாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
