ஜேசிபி இயந்திரத்தின் திரும்பத்தூர் மாவட்டம் எர்த் மூவர்ஸ் உரிமையாளர் நல சங்கம் சார்பில் வாடகையை உயர்த்த கோரி மாபெரும் அடையாள வேலை நிறுத்தம்

புதிய ஜேசிபி இந்திரம் வாகனம் வாங்கினால் விலை உயர்வு, உதிரி பாகங்கள் விலை உயர்வு, எரிபொருள், இன்சூரன்ஸ், சாலை வரி, ஜிஎஸ்டி, மெக்கானிக் சார்ஜ், வெல்டிங் உயர்வு, ஆப்ரேட்டர் சம்பள உயர்வு, என ஜேசிபி இயந்திரம் வைத்திருப்போர் விலை உயர்வினால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்

இது போன்ற விலை உயர்வினால் ஜேசிபி இயந்திர உரிமையாளர்கள் சிரமத்துக்குள்ளாகி வருவதால்

ஜேசிபி இயந்திரத்தின் திருப்பத்தூர் மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் வாடகையை உயர்த்தக் கோரி வெங்களாபுரம் பகுதியில் அமைந்துள்ள காளியம்மன் கோவில் அருகே ஜேசிபி இயந்திரத்தின் உரிமையாளர்கள் சுமார் 80க்கும் மேற்பட்டோர் தங்களுடைய வாகனங்களை நிறுத்தி வைத்து மாபெரும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 2500 ரூபாய் வாடகை வாங்க வேண்டும் அதற்கு மேலாக மினிமம் இரண்டு மணி நேரத்திற்கு 3 ஆயிரத்து 500 ரூபாய் வாங்க வேண்டும் அதற்கு அடுத்தபடியாக ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சுமார் 1300 ரூபாய் வாங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.

மேலும் குறைந்த வாடகைக்கு எந்த ஒரு ஜேசிபி இயந்திரத்தின் உரிமையாளர்களும் வாடகைக்கு ஓட்ட வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டு இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்..