தமிழகத்திலேயே முதலாவது தேசிய தர சான்றிதழ் பெற்ற பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குழுவினர் ஆய்வு


தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு மத்திய அரசு 2018ம் ஆண்டு தேசிய தர சான்றிதழ் வழங்கியது
அதை தொடர்ந்து 2023 ம் ஆண்டு மீண்டும் தேசிய தர சான்றிதழும்
மகப்பேறு பிரிவும் தர சான்றிதழ் வழங்கப்பட்டது
மேலும் குழந்தைகள் நலப் பகுதி சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழகத்தில் முதல் முறையாக தர சான்றிதழ் பெற்று சாதனை படைத்தது
தர சான்றிதழ் பெற்ற மருத்துவமனைகள் அதன் செயல்பாடுகளை ஆய்வு மேற்கொள்ள தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது
அதன்படி பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துமனைக்கு ஆய்வு மேற்கொள்ள வந்த மருத்துவர் சவுத்ரி, செவிலியர்கள் திலகராணி, ரத்னா டைசி, அடங்கிய குழுவினரை
மருத்துவமனை கண்காணிப்பாளர்
டாக்டர் ராஜா வரவேற்றார்
பொள்ளாச்சி மருத்துவமனையில் வெளி நோயாளிகள் உள் நோயாளிகள் குறித்தும் மேலும் மருத்துவமனையில் உள்ள 20 சிகிச்சை பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்து குழுவினருக்கு விளக்கப்பட்டது