
பொள்ளாச்சி அருகே ஆழியார் ஆணையில் ஆண் பிரேதம் மிதப்பதாக ஆழியார் காவல் நிலையத்திற்கு ஆளியார் அணை பாதுகாவலர் பார்த்திபன் என்பவர் தகவல் தெரிவித்ததின் பேரில் ஆழியார் காவல் நிலைய போலீசார்
நேரில் சென்று பார்த்த பொழுது 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஆண் பிணம் ஒன்று ஆழியாறு படத்துறை அருகில் நீரில் இருப்பது தெரியவந்தது
இதை அடுத்து உள்ளூர் பொதுமக்களின் உதவியுடன் ஆண் சடலத்தை வெளியில் எடுத்து பார்த்த பொழுது சட்டை பையில் கடந்த 13ம் கோவை அரவிந்த் கண் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்ததற்கான சீட்டு உள்ளது அதில் முதியவரின் முகவரி அடக்கிய சீட்டில் திருமூர்த்தி என்பதும் (70) இவரது மக மகனின் பெயர் ரவிக்குமார் என்றும் தெரியவந்தது பொள்ளாச்சி அருகே உள்ள இந்திரா நகர் மாக்கினாம்பட்டி என விலாசம் உள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது
ஆழியார் பூங்காவில் விசாரணை செய்து பார்த்த பொழுது நேற்று காலை 10 மணிக்கு மேல் இறந்த திருமூர்த்தி என்பவர் ஆழியாறு பார்க் வழியாக உள்ளே சென்று சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
மாக்கினாம் பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு
பிரேதத்தை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். என காவல்துறையினர் தெரிவித்தனர், முதியவர் சடலம் ஆழியார் அணையில் மிதந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
