தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை பாலியல் சீண்டல்களை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசை கண்டித்து தருமபுரியில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 500 க்கும் மேற்பட்டோர் கைது.

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி மீது பாலியல் வன்கொடுமை நடைபெற்ற சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் தொடர் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

அதனை தொடர்ந்து அதிமுக சார்பாக மாணவியின் பாலியல் வன்கொடுமையை கண்டிக்கும் வகையில் தமிழக முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அதிமுக தலைமை கழகம் அறிவுத்திருந்தது.
அதனைடிப்படையில் தருமபுரி தொலை தொடர்பு அலுவலகம் எதிரில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து 500 க்கும் மேற்பட்ட அதிமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை, சட்ட ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவைகளை தமிழக அரசை கவனிக்க தவறியதை கண்டித்து பல்வேறு கண்டன கோஷங்களை வெளிப்படுத்திக் கொண்டிருந்தபோது காவல் துறையினர் கைது செய்து வாகனங்களில் அழைத்து சென்றனர்.