வரதட்சணை கொடுமையால் தந்தையுடன் வந்த இளம் பெண் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவத்தால் பரபரப்பு.

தருமபுரி மாவட்டம் பொம்மிடி அடுத்த நத்தமேடு பகுதியை சேர்ந்த மாதம்மாள் மாதேஷ் தம்பதியினரின் மகள் அஞ்சலி (26) இவர் கடந்த 2019 ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த பொனனுசாமி மேகளா தம்பதியரின் மகன் தங்கமணி (27) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் திருமணம் ஆனதிலிருந்து அஞ்சலியிடம் வரதட்சணை கேட்டு கணவர் தங்கமணி மற்றும் அவரின் பெற்றோர்கள் மற்றும் அவரது சகோதரி ஆகியோர் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதனால் வாழ முடியாமல் தாய் வீட்டில் கடந்த இரண்டு ஆண்டு காலமாக வசித்து வந்துள்ளார்.
ஒவ்வொரு முறையும் தன்னை கணவரிடம் சேர்த்து வைக்கும்படி பொம்மிடி காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். பல முறை விசாரணை செய்து சமரசம் செய்து அனுப்பி வந்தாலும் வீட்டிற்கு அழைத்து சென்று தொடர்ந்து மாமியார் நாத்தனார் மற்றும் கணவர் வரதட்சதை கேட்டு சித்ரவதை செய்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மாமியார் குழந்தைகளுக்கு குழந்தையின் கையில் தீக்காயம் ஏற்படுத்தி வந்துள்ளனர். இதனால் மனமுடைந்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது தந்தை மாதேஸ்வரன் மற்றும் 3 குழந்தைகளுடன் வந்து மண்ணென்யை உடல் மீது ஊற்றி தற்கொலை செய்ய முயன்றார். உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் தடுத்து தண்ணீர் ஊற்றி இந்த இளம்பெண் அஞ்சலி மனு மீது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.