தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே தமிழ் மாநில விவசாயிகள் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு மாநில குழு உறுப்பினர் சிவன் தலைமை தாங்கினார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கலைச்செல்வம் இந்த ஆர்ப்பாட்டத்தை தூக்கி வைத்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தீபாவளிக்கு குடும்ப அட்டைக்கு ரூபாய் 5 ஆயிரம் போனஸ் வழங்க வேண்டும் , விவசாயிகள் தொழிலாளர்கள் அனைவருக்கும் இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் ,100 நாள் வேலையை 200 நாளாக மாற்றி கொடுக்க வேண்டும் நகர் புறத்தில் உள்ள மக்களுக்கு 100 நாள் வேலை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்டட சங்க மாநில தலைவர் ரவி மற்றும் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள் கிராமப்புற மக்கள் என ஏராளமான இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.