திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பத்தை இடித்து கொடி கம்பம் திருட்டு,நீதி கேட்ட 7விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்ட நிலையில் அக்கட்சியினர் உடனடியாக விடுதலை செய்ய கோரியும், கம்பத்தை இடித்து தள்ளி கம்பத்தை திருடி சென்ற நபர்களை உடனடியாக கைது செய்ய கோரியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் தர்ணா போராட்டம்…

திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் ஆலமரத்து வட்டம் பகுதியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பம் கடந்த 10வருடங்களுக்கு முன்பு சாலையின் அருகில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் நிறுவப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையெடுத்து அந்த நிலத்தினை செல்வகுமார் என்பவர் வாங்கி வீட்டுமனை அமைத்துள்ளார்.

இவர் அடியாட்கள் கொண்டு இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பத்தினை இடித்து தள்ளி விட்டு, கம்பத்தை திருடி சென்றுள்ளனர்.

இதனை அறிந்த கந்திலி ஒன்றிய செயலாளர் சக்தி, திருப்பத்தூர் நகர செயலாளர் ஆனந்தன் உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பம் இடித்ததை தட்டி கேட்டதால் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 7பேரை போலீசார் கைது செய்து கந்திலி காவல் நிலையத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

இதனால் உடனடியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை உடனடியாக விடுதலை செய்து, கம்பத்தினை இடித்து, கொடி கம்பத்தினை திருடி சென்ற நபர்களை உடனடியாக கைது செய்ய கோரி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டு அதனை தொடர்ந்து தர்ணாவில் ஈடுப்பட்டு வருகின்றனர்.