
தமிழ்நாடு சட்டமன்றத்தில் புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட ஜே.சி.டி.பிரபாகர் வாழ்த்தி பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை அதாவது இந்து மதம் ஒழிக்கப்பட வேண்டும் என பேசி உள்ளதை கண்டித்து தமிழக முழுவதும் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக சிவானந்த காலனி, பவர் ஹவுஸ் நடைபெற்ற கண்ணன் ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர் குமார், பா.ஜ.க தேசிய சிறுபான்மையினர் பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் உள்பட ஏராளமான கலந்து கொண்டனர். சமாதானத்தை ஒழிப்பேன் என்று கூறிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர் குமார் பேசும்போது
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் படுதோல்வி அடைந்து உள்ளதாகவும், தமிழகத்தினுடைய முதலமைச்சர் ஆக இருந்த மு க ஸ்டாலின் தோற்கடிக்கப்பட்டார் என்றும், இந்த தோல்வி மறைப்பதற்காக சட்டமன்றத்தில் பேசுகின்ற போது அந்த கட்சியினுடைய எதிர்க்கட்சியின் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும் என்று பேசி உள்ளார். அதை பேச வேண்டிய அவசியம் இல்லை, சட்டசபையில் அடுத்த ஐந்தாண்டு காலம் ஆட்சியில் மக்களுக்கு என்ன ? செய்ய வேண்டும் என்பதை பேசாமல், பிரச்சனையை கிளப்பி உள்ளதாகவும், காரணம் என்னவென்றால் தோல்வியை மறைப்பதற்காக என்றும், எப்பொழுதெல்லாம் தி.மு.க விற்கு தோல்வி வருகிறதோ, ஒன்று இந்தி எதிர்ப்பு எடுப்பார்கள் அல்லது இந்து எதிர்ப்பு எடுப்பார்கள். ஏற்கனவே உதயநிதி மீது பல்வேறு மாநிலங்களில் வழக்கு உள்ளதாகவும், கர்நாடகா மாநிலத்தில் ஒரு லட்ச ரூபாய் கட்டி ஜாமீனில் வெளியே வந்து உள்ளதாக கூறியவர், அதனால் சட்டசபையில் ஒளிந்து கொண்டு பேசுவதாகவும், மக்கள் மத்தியில் இன்று கொந்தளிப்பு ஏற்பட்டு உள்ளதாக கூறியவர், நாடு முழுவதும் இந்த பிரச்சனை எழுந்து உள்ளது என்றும், தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவதாகவும், உதயநிதி கைது செய்ய வேண்டும் என்றும், எதற்காக வேண்டி இப்பொழுது பேசுகிறார். இந்த ஆட்சி என்ன நடக்கிறது, ஆட்சிக்கு வழி விட வேண்டும் என்றும், தோல்வியை பொறுப்பேற்காமல் அதற்கு மாறாக மக்கள் மத்தியில் ஒரு வன்மத்தை கிளப்ப வேண்டும், மத துர்பிஷரோகம் செய்ய வேண்டும் என்று முயற்சி செய்வதாகவும், உடனடியாக இதை கண்டித்து தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருவதாகவும் கூறினார். இந்த நிகழ்ச்சியில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் சதீஷ், கோவை கோட்ட பொதுச்செயலாளர் பாபா கிருஷ்ணன், கோவை கோட்ட செயலாளர் உருவை பாலன், ராஜ்குமார், பாலகிருஷ்ணன், அசோக் குமார், மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால், உட்பட 3500 க்கும் மேற்பட்ட கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
