
கண் பரிசோதனைக்கான இந்த நவீன மருத்துவ வாகனத்தின் செயல்பாட்டை தமிழ்நாட்டின் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு. பி. மூர்த்தி அவர்கள் தொடங்கி வைத்தார்.
இச்சேவையின் தொடக்கவிழா நிகழ்வில் மதுரை மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் எல். அருள் சுந்தரேஷ் குமார், நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் திரு. ஜி. கரிக்கோல்ராஜ் நாடார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நடமாடும் மருத்துவமனையில் கணினி வழி கண் பரிசோதனை, கண்புரை, குளுக்கோமா (கண் அழுத்த நோய்), கிட்டப்பார்வை மற்றும் நீரிழிவு நோயினால் ஏற்படும் கண் பாதிப்புகள் ஆகியவற்றைக் கண்டறியும் வசதிகள் உள்ளன. மேலும், அனுபவம் வாய்ந்த மருத்துவக் குழுவினர் மூலம் கண் பாதிப்புள்ள நபர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள், தரமான கண் கண்ணாடிகள் மற்றும் மருந்துகள் இந்த நடமாடும் கிளினிக்கிலேயே வழங்கப்படுகின்றன. குறிப்பிட்ட தேவைகளின் அடிப்படையில் கண் ஆரோக்கியத்தை எப்படி மேம்படுத்துவது மற்றும் சிறப்பாக பராமரிப்பு என்பதற்கான பரிந்துரைகளும், ஆலோசனைகளும் வழங்கப்படுவது கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு அதிக பயனுள்ளதாக இருக்கும். மக்கள் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு நீண்ட தூரம் பயணிக்கும் சிரமமின்றி தங்கள் இடத்திலேயே உயர்தர கண் பரிசோதனைகளையும், ஆலோசனையையும் பெற இது வழிவகை செய்கிறது.
இம்மருத்துவமனையின் 7-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, பொருளாதார வசதி இல்லாத மக்களுக்காக இலவச கண் பரிசோதனையை ஆதி கண் மருத்துவமனை வழங்குகிறது. மேலும் கண்புரை அறுவை சிகிச்சைகளையும், உயர்தர கண் பராமரிப்பையும் குறைந்த கட்டணத்தில் இது வழங்குகிறது. எந்த வயது பிரிவைச் சேர்ந்த நபராக இருப்பினும், பாதுகாப்பான, கனிவான கண் பராமரிப்பு சேவையை துல்லியமாக வழங்குவதற்கு மேம்பட்ட நோயறிதல் மற்றும் சிகிச்சை தொழில்நுட்பத்தை இம்மருத்துவமனை அனுபவம் மிக்க கண் சிகிச்சை நிபுணர்களைக் கொண்டு செயல்படுத்துகிறது.
