தேசிய குடற்புழு நீக்க நாள் கசிநாயக்கன்பட்டி அரசு பள்ளியில் 1,100 மாணவர்களுக்கு குடல் புண் நீக்க மாத்திரையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியம், கசிநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, பள்ளியில் பயிலும் 1,100 மாணவ–மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி வழங்கினார்

பின்பு தேசிய குடற்புழு நீக்க நாளில் மாவட்ட ஆட்சியர் மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் மருத்துவர்கள் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்

இந்த நிகழ்வில் பேசிய மாவட்ட ஆட்சியர், மாணவர்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் கல்வியில் ஆர்வத்துடன் சிறப்பாக செயல்பட முடியும் என்று குறிப்பிட்டார். மேலும், வருடத்திற்கு இருமுறை குடற்புழு நீக்க மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், தன் பள்ளி நாட்கள் நினைவுக்கு வருவதாக கூறி, வரும் கல்வியாண்டில் 10ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் 100% தேர்ச்சி பெற வேண்டும் என வாழ்த்தி கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் , வட்டார மருத்துவ அலுவலர் மாவட்ட தொற்றுநோய் நிபுணர், மாவட்ட தாய் சேய் நல அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.