
அசோசியேஷன் ஆப் அலையன்ஸ் க்ளப் இன்டர்நேஷனல் மாவட்டம் 250 எஸ் அமைப்பு மற்றும் கோவை சிங்காநல்லூர் விஜிஎம் மருத்துவமனை இணைந்து, தேசிய மருத்துவர்கள் தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
சிங்காநல்லூர் பகுதியில் உள்ள விஜிஎம் மருத்துவமனையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அலையன்ஸ் மாவட்ட ஆளுநர் ஜி. சுந்தரம் தலைமை தாங்கி, விழாவினை துவக்கி வைத்தார்.
மேலும் இவ்விழாவில் மாவட்ட சுகாதார இணை இயக்குநர் டாக்டர் வி. சுமதி மற்றும் விஜிஎம் பவுண்டேஷன் அமைப்பின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் வி. ஜி. மோகன் பிரசாத் மற்றும் சர்வதேச அலையன்ஸ் சங்கத்தின் இயக்குனர் என். ராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மருத்துவர்கள் தின சிறப்புரையாற்றினார். தொடர்ந்து கோவை மாவட்டத்தில் சிறந்த மருத்துவசேவை புரிந்த 14 மருத்துவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் மற்றும் சிறப்பு மருத்துவர்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டது.
விழாவில் சங்கத்தின் முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் அலையன் குணசேகரன், அலையன் விஜயகுமார், அலையன் ஸ்ரீனிவாசன், மற்றும் அலையன் ராஜேஷ் குமார் வாழ்த்துரை வழங்கினர். விஜிஎம் மருத்துவமனையின் எலும்பு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுமன் வரவேற்புரையாற்றினார்.
விழாவின் இறுதியாக அலையன்ஸ் மாவட்ட இரண்டாம் துணை ஆளுநர் அலையன்ஸ் பிரபாகரன் நன்றியுரை வழங்கினார். இந்த விழாவில் விஜிஎம் மருத்துவமனையின் மருத்துவவர்கள் மதுரா பிரசாத், மித்ரா பிரசாத், வம்சி மூர்த்தி, மற்றும் அலையன்ஸ் சங்க மாவட்ட செயலாளர்கள் ரவீந்திரன், ராய் தாமஸ், அமைச்சரவை ஆலோசகர் பாலசுப்பிரமணியம், தலைவர் டாக்டர் சுபத்ரா ஐயங்கார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
